News January 28, 2026
பிப்.1-ல் டாஸ்மாக் விடுமுறை.. அரசு முக்கிய அறிவிப்பு

வள்ளலார் நினைவு நாளையொட்டி பிப்.1-ம் தேதி (வரும் ஞாயிறு) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளனர். அதில், அரசின் உத்தரவை மீறி யாரேனும் கடையை திறந்தாலும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மது விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
தேவாலயங்கள் + சொத்துகள்.. HC முக்கிய உத்தரவு

CSI தூத்துக்குடி – நாசரேத் மறை மாவட்ட தேர்தல் வழக்கு தொடர்பாக சென்னை HC முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயில்கள், மசூதிகளுக்கு அறநிலையத் துறை, வக்ஃப் வாரியம் இருப்பது போல் தேவாலயங்களுக்கு இல்லை. மேலும், தேவாலயங்களுக்கு கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் என பல சொத்துகள் இருப்பதால் அவற்றை நிர்வகிக்க ஏன் சட்டப்பூர்வ அமைப்பை உருவாக்கக் கூடாது என்பதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு HC உத்தரவிட்டுள்ளது.
News February 10, 2026
முருகன் வேல் எங்கள் கையில் உள்ளது: அமைச்சர் ரகுபதி

ராமா ராமா என்று சொன்னவர்களை எல்லாம் முருகா முருகா என்று ஓடவிட வைத்திருப்பது தமிழக மக்களின் பக்தி என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முருகன் பெயரை சொன்னால்தான் எடுபடும் என முருகனை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், ஆனால் முருகனின் வேல் தங்கள் கையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ராம கோஷம், முருக கோஷம் என எந்த வழியில் வந்தாலும் TN மக்களை திசை திருப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
News February 10, 2026
நடிகை கேத்ரின் மரணம்.. அதிர்ச்சியூட்டும் காரணம்

பிரபல நடிகை கேத்ரின் ஓஹாரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. ‘ஹோம் அலோன்’, ‘தி ஸ்டூடியோ’, ‘தி பெஸ்ட் ஷோ’ உள்ளிட்ட பல படங்களில் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த கேத்ரின், கடந்த 30-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது மருத்துவ அறிக்கை வெளிவந்துள்ளது.


