News January 28, 2026
FLASH: வாழப்பாடியில் தட்டிதுக்கிய விஜய்!

வாழப்பாடி முன்னாள் தேமுதிக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் சென்று அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தேமுதிகவில் 14 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 4, 2026
சேலம்: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது
News February 4, 2026
சேலம்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க
News February 4, 2026
சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கோரி மனு

சேலத்தில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள விஜய் மக்கள் சந்திப்பிற்காக இரண்டு இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் மகுடஞ்சாவடி மற்றும் மாநகர பகுதியில் சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு, மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் காவல்துறையினரிடம் மனு அளித்தார்.


