News January 28, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் தமிழக அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை இந்தத் தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உடனடியாக தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE IT.
Similar News
News February 7, 2026
நேரு பொன்மொழிகள்!

*செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம் *சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன் *உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது *பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது *முயற்சிகள் செய்துகொண்டிருப்பவர்களைத் தான் வெற்றிகள் தேடி வரும்.
News February 7, 2026
குடிநீர் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக்.. HC புதிய உத்தரவு

பிளாஸ்டிக் பாட்டில் மட்டுமின்றி பாக்கெட்டில் அடைக்கப்படும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது FSSAI-ன் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை HC, பிளாஸ்டிக் பாட்டிலில் மைக்ரோ பிளாஸ்டிக் உள்ளது குறித்த எச்சரிக்கை வாசகம் இனி இடம்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறிய HC, ஆய்வுகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியது.
News February 7, 2026
மனசு உடைந்துபோக இதுவே காரணம்: கயாது

வாழ்க்கையில் தான் மாற்றிக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருப்பதாக டிராகன் நாயகி கயாது லோஹர் கூறியுள்ளார். தன்னை மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆள் எனக் குறிப்பிட்ட அவர், அதைத் தனது பிரச்னையாக நினைப்பதாகவும், உணர்ச்சிவசப்படுவதால் எளிதில் மனமுடைந்து விடுவதாகவும் தெரிவித்தார். ஆகையால், இந்த போக்கை மாற்றிக்கொண்டு இன்னும் உறுதி மிக்கவளாய் மாற ஆசைப்படுவதாக குறிப்பிட்டார்.


