News January 28, 2026

மயிலாடுதுறை மக்களே இந்த விஷயம் தெரியுமா?

image

மயிலாடுதுறை பாரம்பரிய நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்றது. குறிப்பாக கூறைநாடு புடவை அல்லது கூறை பட்டு புடவைகள் இங்கு பிரபலமானவையாகும். இந்த சேலை திருமணம் மற்றும் மத சடங்குகளின் ஒரு தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்படுகிறது. இது கலாச்சார சார்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த புடவைகள் சிறிய கட்டங்கள் கொண்ட வடிவமைப்புடன் அழகான தோற்றத்தில் காணப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 6, 2026

மயிலாடுதுறை: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

மயிலாடுதுறை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக்<<>> செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை 3 கட்டங்களாக 130 முகாம்கள் நடைபெற்றன. முகாமில் 59,349 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 50371 ஏற்பளிக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட 7849 விண்ணப்பங்களில் 4397 விண்ணப்பங்கள் ஏற்பளிக்கப்பட்டு ரூ.52,76,400 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News February 6, 2026

மயிலாடுதுறை: மின்தடை அறிவிப்பு

image

சீர்காழி அருகே உள்ள அரசூர் துணைமின் நிலையத்தில் வருகிற பிப்ரவரி 7 சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் புத்தூர், எருக்கூர், மாதிரவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், அரசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!