News January 28, 2026

தென்காசியில் காணாமல் போன 45 நபர்கள்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள காணாமல் போன நபர்களை கண்டறிய கொடுக்கபட்ட புகார்களை விரைந்து கண்டறியும் பொருட்டு எஸ்பி.மாதவன் உத்தரவின் பேரில் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. பல்வேறு காரணங்களால் காணாமல் போனதாக 20 காவல் நிலையங்களில் பதிவாகியுள்ள 44 வழக்குகளில் 28 பெண்கள், 10 ஆண்கள், 06 பெண் குழந்தைகள் மற்றும் 01 ஆண் குழந்தை என மொத்தம் 45 நபர் உரிய நபர்களிடம் ஒப்படைப்பு.

Similar News

News February 1, 2026

தென்காசி : இலவச வக்கீல் சேவை Whatsapp எண்…!

image

தென்காசி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

தென்காசி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 1, 2026

தென்காசி: Spam Calls-க்கு இனி END CARD

image

தென்காசி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!