News January 28, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

மணவாளநகர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மணவாளநகர் போலீசார் பட்டரைப் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். இதில், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஏழுமலையிடம்(54) 128 கிலோ குட்கா, வெங்கடேசன்(47) என்பவரிடம் 128 கிலோ குட்கா என பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News February 9, 2026

திருவள்ளூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

News February 9, 2026

திருவள்ளூரில் EB பில் எகுறுதா..?

image

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு <<>>கிளிக் செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் ரித்தீஸ்(17). இவரும், இவருடைய உறவினரான நரேஷ்(18) என்பவரும் நேற்று(பிப்.8) பைக்கில் பெரியபாளையம் சென்று திரும்பிய போது மாநில நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற பைக் மீது மோதினர். இதில், தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியதில் ரித்தீஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னால் சென்ற பைக்கை ஓட்டிய பரசுராமன்(35), நரேஷ் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

error: Content is protected !!