News January 28, 2026
தஞ்சை: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

வாரத்தில் 5 நாட்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் முன்பு மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து, கோரிக்கை முழக்கமிட்டனர்.
Similar News
News February 1, 2026
தஞ்சை: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 1, 2026
தஞ்சை மக்களே உஷார்.. ரூ.1¼ கோடி மோசடி!

தஞ்சையை சேர்ந்த விமல் வெளிநாடு செல்வதற்காக பிரசன்னா என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். இதுபோல தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 58 பேர் ரூ.1 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்தை பிரசன்னாவிடம் கொடுத்துள்ளனர். பின்னர் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த அவர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவத்தில் தொடர்புடைய பிரசன்னா, அவரது மனைவி வசுமதி, ரித்தீஷ் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News February 1, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


