News May 8, 2024
கோவிஷீல்டு தடுப்பூசி திரும்ப பெறப்பட்டது

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறுவதாக இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலை., உடன் இணைந்து கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உருவாக்கியது. சமீபத்தில் இத்தடுப்பூசியால் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது வணிகக் காரணங்களுக்காக திரும்பப் பெறப்படுவதாக விளக்கமளித்துள்ளது.
Similar News
News September 24, 2025
சர்க்கரை நோயாளிகள் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

முருங்கை இலை டீ நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✱4- 6 முருங்கை இலை எடுத்து, நிழலில் உலர்த்தவும் ✱இதனை, நைசாக அரைக்கவும் ✱இப்பொடியை, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து, தேன் சேர்த்தால் சுவையான, ஹெல்தியான முருங்கை இலை தேநீர் ரெடி. இப்பதிவை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 24, 2025
விஜய்யை விமர்சிக்க திமுக மேலிடம் தடை

விஜய்யை பற்றி விமர்சிக்க அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு திமுக மேலிடம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மக்கள் சந்திப்பு பயணத்தில் விஜய் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். ஆனால், இதற்கு எதிர்வினை ஆற்ற முடியாமல், தங்களது வாய் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்களான கே.என்.நேருவும், காந்தியும் மேலிடத்தின் உத்தரவை வெளிப்படையாக தெரிவித்தனர்.
News September 24, 2025
தங்கம் விலை தாறுமாறாக உயரப் போகிறது

தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹85 ஆயிரத்தை தாண்டியது. குறிப்பாக, நேற்று முன்தினம் சவரனுக்கு ₹1,120, நேற்று ₹1,680 என 2 நாள்களில் ₹2,800 உயர்ந்துள்ளது. இதுகுறித்து தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, தங்கம் விலை இனி குறையாது, உயர்ந்து கொண்டேதான் செல்லும். மிக விரைவில் 1 சவரன் தங்கத்தின் விலை, ₹1 லட்சத்தை எட்டும் என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.