News January 28, 2026
சளி காரணமாக குரல் கரகரப்பாக இருக்கிறதா?

சளி காரணமாக உங்கள் குரல் கரகரப்பாக இருப்பதற்கோ அல்லது குரல் இழப்பிற்கோ குரல்வளை அழற்சியே காரணம். ஏனெனில், இத்தொற்றினால் குரல் நாண்கள் வீக்கமடையும். எனவே விரைவாக குணமடைய, பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். வெதுவெதுப்பான உப்பு நீரால் வாய் கொப்பளிப்பதும், தேன் அருந்துவதும் வீக்கத்தைக் குறைக்கும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்வும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
Similar News
News February 11, 2026
சீட் இல்லையென்றால் கவலை வேண்டாம்: விஜய்

மாற்றுக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவெகவில் இணைந்ததால் தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு கூட சீட் கிடைக்காத சூழல் இருப்பதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், இன்று நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் ‘வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் வருத்தப்படக்கூடாது’ என விஜய் கூறியுள்ளார். வேட்பாளர்களுக்கு தவெக நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்கவும், ஒரு தொகுதிக்கு 5 தேர்தல் பணிமனைகளை அமைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
News February 11, 2026
விவாகரத்தால் சந்தோஷம் அடைகிறேன்: பார்த்திபன்

நடிகை சீதாவுடனான விவகாரத்து குறித்து நடிகர் பார்த்திபன் மனம் திறந்து பேசியுள்ளார். சீதாவுடன் வாழ்ந்த 12 ஆண்டுகள் மிகவும் இனிமையானவை எனக்கூறிய பார்த்திபன், சீதாவை பிரிந்ததை எண்ணி வருந்தியதே இல்லை; சொல்லப்போனால் ரொம்ப சந்தோஷப்படுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். எந்த பெண்ணும் திருமணம் என்ற பெயரில் கட்டுப்பாடான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்றும் சுதந்திரமாக வாழவே விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


