News January 28, 2026

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (ஜன.27) இரவு முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 12, 2026

கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவித்தார்!

image

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தின் மூலம் டெலிவெரி செய்யும் இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர்கள் பயனடைய <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இதில், உறுப்பினராக சேர்ந்து நலத்திட்ட நிதிய உதவிகள் பெறுமாறு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!

News February 12, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

சின்னசேலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கல்லாநத்தம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு போலீஸ் ராமதாஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது ஞானவேல் (53) என்பவர் 2.5 லிட்டர் சாராயம் வைத்து விற்றதையடுத்து அவரை கைது செய்தனர். சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

News February 11, 2026

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

image

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள உடலின் ரத்த ஆக்சிஜன் செறிவை அளவிடும் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவர்களிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் பொன்னரசு இன்று வழங்கினார்.

error: Content is protected !!