News May 8, 2024
BREAKING விழுப்புரம்: வெளுத்து வாங்கும் கனமழை

விழுப்புரம் மாவட்டத்தின் காணை, பெரும்பாக்கம், கோனூர், மாம்பழப்பட்டு, சென்னாகுனம், கல்பட்டு, பிடாகம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் இன்று காலை முதல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் கோடை வெயில் கொடுமையால் வாடி வந்த மக்களுக்கு ‘வாராது வந்த மாமணியாய்’ வந்த இந்த கனமழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியதோடு, அவர்களது மனங்களை மகிழ்வித்துள்ளது.
Similar News
News January 18, 2026
விழுப்புரம்:+12,ITI, டிப்ளமோ முடித்தவரா நீங்கள் ?

மத்திய அரசின் இந்திய அணுசக்தி நிறுவனத்தில் டெக்னீஷியன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 114 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12th,டிப்ளமோ, ஐடிஐ படித்த 18-28 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.34,286-ரூ.55,932 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News January 18, 2026
விழுப்புரம்: இன்றைய இறைச்சி விலை நிலவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றய (ஜனவரி 18) சந்தை நிலவரப்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 ரூபாய்க்கும் பிராய்லர் கோழி 190 ரூபாய் ஆட்டுக்கறி ஒரு கிலோ 780 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றது. மீன் வகைகளில் சிறிய வஞ்சரம் ஒரு கிலோ 760 ரூபாய்க்கும் வவ்வால் மீன் ஒரு கிலோ 1600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் உள்ளூர் சந்தை நிலவரப்படி மாறுபடும்
News January 18, 2026
விழுப்புரம்: நிலமும் உண்டு, மானியமும் உண்டு!

தமிழக அரசின் நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், ஆதிதிராவிடர் & பழங்குடியினப் பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றுகிறது. இத்திட்டத்தில் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது ₹5 லட்சம் வழங்கப்படுவதுடன், பத்திரப் பதிவு கட்டணத்திலிருந்து முழு விலக்கும் அளிக்கப்படுகிறது. 18-65 வயதுடைய, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் உள்ள நிலமற்ற பெண்கள் தாட்கோ <


