News May 8, 2024

ஹாக்கி வீரர்களுக்கு எம்.எல்.ஏ பாராட்டு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற தண்டராம்பட்டு லயன்ஸ் மற்றும் லியோ சங்கம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில், முதல் பரிசை வென்ற புதுவை குருவிநத்தம் ஹாக்கி அணி வீரர்களை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பாராட்டினார். பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், அருண்குமார், விளையாட்டு ஆர்வலர் பாலகுரு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்

Similar News

News February 5, 2026

புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு மின்னஞ்சல் (Email) வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய்கள் உதவியுடன் தூதரக வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து, சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News February 5, 2026

புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில்<> mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News February 5, 2026

தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் புதுச்சேரி எம்பி

image

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீடு நிலைக்குழு உறுப்பினர்கள், புது தில்லியில் இந்திய மத்திய அரசின் நிதி நிலைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளின் நிதி மேலாண்மை மற்றும் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கலந்துகொண்டார்.

error: Content is protected !!