News January 28, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (27.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும். மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News February 2, 2026
கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நேற்று(பிப்.1) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், முகமது நயிம் ஆகியோரை கைது செய்தனர்.
News February 2, 2026
திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
திருவள்ளூரில் 4 பேர் மீது குண்டாஸ்!

மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(32) தனது நண்பர்களான சுகுமார்(31), கேசவ மூர்த்தி(25) ஆகியோருடன் கடந்த ஜன.16ஆம் தேதி ஆந்திரா மாநிலம், கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பினர். அப்போது கஞ்சா போதை கும்பலுடன் ஏற்பட்ட தகராறில், பார்த்திபன், சுகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகர்(24), வினோத்(36), ஜோதிஷ்(34), நீலகண்டன்(31) ஆகியோர் மீது குண்டாஸ் பாய்ந்தது.


