News January 27, 2026
செங்கோட்டையன் அழைப்பை மறுக்க முடியவில்லை.. TTV

தான் தவெக கூட்டணிக்கு வர வேண்டுமென செங்கோட்டையன் விரும்பியதாக TTV தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், செங்கோட்டையன் சீனியர் என்பதால் அவரது கூட்டணி அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் தயங்கியதாகவும், அதனால் அவர் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலில் போட்டியிடவில்லை என்பது தனது சுய முடிவு என்றும், இதில் தனக்கு எந்த அழுத்தமும் யாரும் தரவில்லை என்றும் கூறினார்.
Similar News
News February 11, 2026
காங்கிரஸ் அநாதையாக நிற்கும்: குஷ்பு

வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து அநாதையாக விடப்படும் என குஷ்பு கூறியுள்ளார். <<19109470>>திமுக – காங்கிரஸ்<<>> இடையேயான சலசலப்பு பற்றி கருத்து தெரிவித்த அவர், இந்த பிரச்னைக்கு அவர்கள் டெல்லி சென்று வந்தாலும் தீர்வு கிடைக்காது என்றார். மேலும், தமிழகம் முழுவதும் திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதால், நிச்சயம் இம்முறை NDA கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News February 11, 2026
இப்படிச் செய்தால் சிலிண்டர் வெடிக்கும்..BIG ALERT!

கேஸ் சிலிண்டர்களை எப்போதும் தரையில் சாய்த்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அதிலுள்ள கேஸ் கசிந்து, பெரும் விபத்து ஏற்படக்கூடும். எனவே, கேஸ் சிலிண்டரை எப்போதும் நிமிர்த்தி வையுங்கள். இப்படி செய்வதால் உள்ளே அதீத அழுத்தத்தில் இருக்கும் கேஸ், கசியாமல் இருக்கும். இத்தகவல் ஒரு குடும்பத்தின் உயிரை காக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 11, 2026
மாணிக்கம் தாகூர் குறிப்பிட்ட 2006 தேர்தலில் நடந்தது என்ன?

<<19108663>>கூட்டணி ஆட்சி ஒத்துவராது<<>> என பேசிய CM ஸ்டாலினுக்கு, 2006 தேர்தலின்போதே காங்கிரஸ் இப்பிரச்னைக்கு முடிவு கட்டியிருக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். அத்தேர்தலில் 163 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றாலும் யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. திமுக-96, காங்.,-34, பாமக-18 இடங்களில் வென்றிருந்தது. அதனால், காங்கிரஸின் ஆதரவுடனே திமுகவின் 2011 வரை ஆட்சி தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.


