News May 8, 2024
அரசு பேருந்து மோதி தொழிலாளி இறப்பு

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி(50) சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (மே 7) டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: இனி புயல், மழை எதுனாலும் கவலை வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: புதியதாக இன்ஸ்பெக்டர்கள் பொறுப்பேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 8 போலீஸ் ஸ்டேஷன்களில் 5 ஸ்டேஷன்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் ஜவ்வாது உசேன், ரிஷிவந்தியத்தில் ரவிச்சந்திரன், வடபொன்பரப்பியில் விவேகானந்த், எலவனாசூர்கோட்டையில் ஆனந்தன், கீழ்குப்பத்தில் அமலா பொறுப்பேற்றனர். கரியாலூர், மணலூர்பேட்டை, வரஞ்சரம் ஸ்டேஷன்களுக்கு இன்னும் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்படவில்லை.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

கள்ளக்குறிச்சி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)


