News May 8, 2024
இன்று “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி தொடக்கம்

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. சென்னை, திருச்சி, கோவை, நாகை, மதுரை, நெல்லை, சேலத்தில் இன்றும், திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரியில் நாளையும், செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, குமரி, கிருஷ்ணகிரியில் மே 10ஆம் தேதியும், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்த நாள்களிலும் இந்நிகழ்ச்சி நடக்கிறது.
Similar News
News September 24, 2025
அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதார் சேவை கட்டணம் உயர்வு!

வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் ஆதாரில் மாற்றம் (பெயர், முகவரி) செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் ₹50-ல் இருந்து ₹75-ஆக உயர்த்தப்படுகிறது. அதே போல, Biometric மாற்றம் செய்ய, கட்டணம் ₹100-ல் இருந்து ₹125-க்கு உயர்த்தப்படுகிறது. ஆனால், புது ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இது முதல்கட்ட விலை ஏற்றம் என்றும், செப்டம்பர் 30, 2038 வரை இது அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 24, 2025
சர்க்கரை நோயாளிகள் இந்த மூலிகை தேநீரை குடிங்க!

முருங்கை இலை டீ நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர் ✱4- 6 முருங்கை இலை எடுத்து, நிழலில் உலர்த்தவும் ✱இதனை, நைசாக அரைக்கவும் ✱இப்பொடியை, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து, தேன் சேர்த்தால் சுவையான, ஹெல்தியான முருங்கை இலை தேநீர் ரெடி. இப்பதிவை உங்களின் நண்பர்களுக்கும் பகிரவும்.
News September 24, 2025
விஜய்யை விமர்சிக்க திமுக மேலிடம் தடை

விஜய்யை பற்றி விமர்சிக்க அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு திமுக மேலிடம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மக்கள் சந்திப்பு பயணத்தில் விஜய் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வருகிறார். ஆனால், இதற்கு எதிர்வினை ஆற்ற முடியாமல், தங்களது வாய் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர்களான கே.என்.நேருவும், காந்தியும் மேலிடத்தின் உத்தரவை வெளிப்படையாக தெரிவித்தனர்.