News January 27, 2026
கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிப்பு

நீலகிரி மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக இயற்கை சாயங்களை கொண்டு ஓவியமாக தீட்டியவர் கோத்தகிரியை சேர்ந்த கிருஷ்ணன் அண்மையில் உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. கிருஷ்ணன் இறந்த பிறகு மனைவி சுசிலா தனது 4 குழந்தைகளுடன் கல்லாறு அருகே பாக்குத்தோப்பில் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த இயலாமல் குடிசை வீட்டில் தவித்து வருகிறார்.
Similar News
News January 28, 2026
கோவையில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

கோவை, குப்பிச்சிபாளையத்தில் புகழ்பெற்ற கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. சக்திவாய்ந்த பெருமாளை வணங்கினாள், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குமாம். இங்கு பச்சை பயறும், உருண்டை வெல்லமும் பெருமாளுக்கு படைத்து, பின்பு அவற்றை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கினால், தோஷங்கள் அனைத்தும் முற்றிலும் நீங்குமாம். வெள்ளிக்கிழமைகளில் மாங்கல்ய பாக்கியம் கேட்டு வரும் பெண்களுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறதாம். SHAREit
News January 28, 2026
கோவையில் நாளை முதல் ஜவுளி தொழில் மாநாடு

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியோர் இணைந்து நடத்தும் ஜவுனி தொழில் மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் நளை மற்றம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக துவக்கி வைக்கவுள்ளார். இம்மாநாட்டில் ஜவுளித் தொழிலுக்கென பிரத்யேகமாக கண்காட்சி நடைபெறவுள்ளது.
News January 28, 2026
வால்பாறை அருகே விபத்து: 25 பேர் காயம்

வால்பாறை அருகாமையில் உள்ள பெரியார் நகர் பகுதியில் இன்று காலை ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எஸ்டேட் பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டருடன் பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 25 எஸ்டேட் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.


