News January 27, 2026

புதுவை: தமிழ் தெரியுமா? ரிசர்வ் வங்கியில் வேலை!

image

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.24,250 முதல் ரூ.53,330 வரை வழங்கப்படும். தமிழக பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருப்பது கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு கிளிக் <<>>செய்து பிப்.4க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

“IT, AI-ல் புதுவையை மையமாக வேண்டும்” – அமித்ஷா!

image

காரைக்கால் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளோம். புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வோம். மேலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம். ஐடி, ஏஐ புரட்சியில் புதுவையை மையமாக வேண்டும்.” என தெரிவித்துள்ளார். இது குறித்த உங்களது கருத்துகளை கமெண்டில் தெரிவியுங்கள்.

News February 14, 2026

புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமித்ஷா!

image

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று வருகைதந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக பொதுக்கூட்டத்தில் பேசியபோது, “உலகின் மிகத்தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.” என வருத்தம் தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பாக “புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையவேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.

News February 14, 2026

புதுச்சேரி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

image

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் புதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 9,44,211 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 4,43,595, பெண்கள் 5,00,477, மூன்றாம் பாலினத்தவர் 139 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண் வாக்காளர்கள் ஆண்களை விட 56,882 பேர்கள் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!