News January 27, 2026
ஜன நாயகன் உடனடி ரிலீஸ்.. கடைசி வாய்ப்பு

‘ஜன நாயகன்’ வழக்கில் இன்று <<18972029>>ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பால்<<>> பட ரிலீஸ் மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், KVN நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு, CBFC-ஐ நாடினால் உடனடியாக தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். CBFC பரிந்துரைத்த 14 CUT-ஐ செய்துவிட்டு மீண்டும் சமர்ப்பித்து கோரிக்கையாக வைத்தால் உடனடி தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
Similar News
News February 2, 2026
CM ஸ்டாலினின் வாக்கு விசில் சின்னத்துக்கே: விஜய்

தவெகவுக்கு இருக்கும் ஆதரவை டெஸ்ட் பண்ண ஒரு வழி இருப்பதாக விஜய் கூறியுள்ளார். திமுகவினரின் செயலால் தூக்கமின்றி தவிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலின் பேசியதை நினைவுகூர்ந்த அவர், CM நன்றாக உறங்கும்போது அவரை எழுப்பி யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டால் அவரே, விசில் சின்னம் தான் என சொல்வார் என்றார். மேலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள்தான் மனதில் இருப்பதை கூறுவார்கள் எனவும் விஜய் பேசியுள்ளார்.
News February 2, 2026
Momos-க்கு ₹85 லட்சம் தங்க நகைகள் கொடுத்த சிறுவன்!

உ.பி.,யில் 7-ம் வகுப்பு மாணவன் Momos மீது கொண்ட காதல் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. Momos கடை நடத்தி வரும் மூவர், சிறுவனிடம் இலவசமாக Momos கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை கொண்டு வர வைத்துள்ளனர். இப்படி சிறுக சிறுக சிறுவனை ஏமாற்றி, ₹85 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுருட்டி கொண்டு எஸ்கேப்பாகியுள்ளனர். அதிர்ந்துபோன குடும்பத்தினர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
News February 2, 2026
₹5-க்கு TNEB கார்டு.. பெறுவது எப்படி?

EB ரீடிங் எடுக்க ஆள் வரும் போதுதான், கார்ட் எங்கு வைத்தோம் என பல வீடுகளிலும் தேடுவோம். பல நேரங்களில் அந்த கார்ட் தொலைந்து போயிருக்கலாம். அப்படி தொலைந்துவிட்டால், பதற வேண்டாம். உங்க ஏரியாவின் EB ஆபிஸுக்கு சென்று, ₹5 கொடுத்து புதிய EB கார்டை பெற்றுக் கொள்ளுங்க. அதேபோல, அட்டை முழுமையாக யூஸ் செய்துவிட்டால், இலவசமாகவே புதிய EB கார்ட் பெறலாம். பலருக்கும் தெரியாத இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


