News January 27, 2026

குமரி: இளைஞர் மீது தாக்குதல்

image

முகிலன் விளையை சேர்ந்தவர் ஹரிஹரன் (28). டிரைவரான இவர் குஞ்சன் விளை என்ற இடத்தில் நேற்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மூன்று பேர் அவரை கல்லாலும், கையாலும் தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Similar News

News January 27, 2026

குமரி: பழைய வாகனம் வாங்கும் போது இது அவசியம் – எஸ்.பி

image

குற்ற சம்பவங்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க பயன்படுத்திய வாகனங்களை(Second Hand) வாங்கும்போதும், விற்கும்போதும் ஆவணங்களில் பெயர் மாற்றம் அவசியம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பயன்படுத்திய வாகனங்கள் வாங்கும் போது 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் சட்ட மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

குமரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க!

News January 27, 2026

குமரியில் கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

image

குமரி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இதுகுறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 94458 50829 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். *இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!