News January 27, 2026
கடலூர்: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
Similar News
News February 5, 2026
கடலூர்: பெண் தலை நசுங்கி பலி

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவர் சின்னம்மாள்(55). இவர் தனது மகன் ஆறுமுகம் (35), மகள் அம்சவல்லி ஆகியோருடன் நேற்று வேப்பூருக்கு வந்து பின், மீண்டும் பைக்கில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் சின்னம்மாளின் தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலியானார். மற்ற 2 பேரும் உயிர் தப்பினர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 4, 2026
கடலூர்: 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் பருவமான நடப்பு கரீப்- 2025-2026 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் 261 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை விவசாயிகள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வியாபாரிகள் நெல் விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
கடலூர்: CM Cell-ல் புகார் அளிப்பது எப்படி?

1. முதலில், <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘Track Grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.


