News January 27, 2026
அனைவரின் போனிலும் இந்த NUMBERS கட்டாயம் இருக்கணும்!

✱விபத்து- 100, 103 ✱அவசர உதவி- 112 ✱மாநகர பஸ்ஸில் அத்துமீறல்(சென்னை)- 93833 37639 ✱குழந்தைகளுக்கான அவசர உதவி- 1098 ✱முதியோர்களுக்கான அவசர உதவி- 1253 ✱மனித உரிமைகள் ஆணையம்- 044-22410377 ✱வங்கித் திருட்டு உதவி- 98408 14100 ✱போக்குவரத்து விதிமீறல் SMS- 98400 00103 ✱போலீஸ் SMS – 95000 99100 ✱போலீஸ் மீது ஊழல் புகார் SMS- 98409 83832. இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.
Similar News
News February 18, 2026
ஒரே தேர்தலில் 4 விஜயகாந்த் போட்டி.. REWIND

2006 பேரவை தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மறைந்த விஜயகாந்த் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். இதில் இவரைத் தவிர, கே, ச, எ ஆகிய இன்ஷில்களைக் கொண்ட 3 விஜயகாந்த் பெயர் கொண்டவர்கள் போட்டியிட்டிருந்தனர். அதேபோல், 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அப்போது, இதே ‘O’ இன்ஷியலில் 4 பன்னீர்செல்வமும், ‘M’ இன்ஷியலில் 1 பன்னீர்செல்வமும் போட்டியிட்டனர்.
News February 18, 2026
தவெகவுக்கு ‘நோ’.. செங்கோட்டையன் ஏமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக EX அமைச்சர் ஒருவரை தவெகவில் இணைக்க செங்கோட்டையன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவர் தனக்கு திமுகவில் இருந்து அழைப்பு வந்துள்ளதாகவும், அங்கு செல்வதே சிறந்ததாக இருக்கும் என்றும் கூறிவிட்டதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செங்கோட்டையன் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளார். ஏற்கெனவே வைத்திலிங்கத்தை தவெகவில் இணைக்கும் முயற்சி தோல்வி அடைந்தது.
News February 18, 2026
40 நாள்கள் தவக்காலம் இன்று தொடங்கியது

ஈஸ்டர் பெருவிழாவையை முன்னிட்டு கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம், சாம்பல் புதனான இன்று தொடங்கியது. இக்காலத்தில் இறைச்சி, மது சாப்பிடாமல் விரதமிருந்து சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் விழாவாக கொண்டாடுகின்றனர். அதற்கு முந்தைய 40 நாள்கள் இயேசுவின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகின்றனர்.


