News January 27, 2026

வாட்ஸ்ஆப் பாதுகாப்பானது அல்ல: எலான் மஸ்க்

image

உங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜை ரகசியமாக யாராவது படித்தால் எப்படி இருக்கும்? ஆனால், அது உண்மை தான் என்கிறார் எலான் மஸ்க். வாஸ்ட்ஆப் உரையாடல்களை மெட்டா நிறுவனம் படிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மெட்டா, என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் மெசேஜ்கள் பாதுகாப்பானவை என வாதிட்டது. இதுபற்றி கமெண்ட் செய்த மஸ்க், வாட்ஸ்ஆப் பாதுகாப்பற்றது என்று கூறியுள்ளது, அதன் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 7, 2026

ஜெ., பாணியில் ஜாதகத்தை கேட்கிறாரா விஜய்?

image

விருப்ப மனுவுடன் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் தவெக சேர்த்து வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் மூலம் அறிமுகமான பெங்களூரு ஜோசியர் மீது விஜய்க்கு பெருத்த நம்பிக்கை வந்துள்ளதால், அவரது அறிவுறுத்தலின்படி வேட்பாளர்களை தேர்வு செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். 2009 தேர்தலில் வேட்பாளர்களின் ஜாதகத்தையும் ஜெ., கேட்டிருந்ததாக கூறப்படுவதால், அதே ஃபார்முலாவை விஜய் ஃபாலோ செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News February 7, 2026

பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா?

image

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதற்கு <<19072951>>இந்தியா<<>> ஒப்புக்கொண்டுள்ளது. அதேநேரம், இனி வெனிசுலாவிலிருந்து இந்தியாவுக்கு எண்ணெய் கொண்டுவர ஆகும் செலவு அதிகரிக்கும். இதனால், அதனை ஈடு செய்ய பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய FM நிர்மலா, நாட்டு மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காது என்று மட்டுமே பதிலளித்தார். உங்கள் கருத்து என்ன?

News February 7, 2026

பெற்றோரை கவனிக்க 45 நாள்கள் கட்டாய விடுப்பு

image

அரசு, தனியார் ஊழியர்களுக்கு 60 வயதை எட்டிய பெற்றோரை கவனித்துக்கொள்ள 45 நாள்கள் விடுப்பு வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் உ.பி. MP சுமித்ரா முன்மொழிந்துள்ளார். தற்போது, ​​நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை 14.9 கோடியாக உள்ளது என்ற அவர், 2036-க்குள், இது 23 கோடியை தாண்டும் என்றார். மேலும், ​​வேலை அழுத்தம் காரணமாக பெற்றோரை கவனிப்பது கடினமாகிறது, அதனால் இந்த விடுப்பு வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!