News January 27, 2026

அரியலூர்: பெண் மீது மோதிய இருசக்கர வாகனம்

image

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்துள்ள காரைக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வேம்பு. இவர் காரைக்குறிச்சியில் இருந்து தா.பழூர் நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த 2 சக்கர வாகனம் மோதியத்தில், படுகாயம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வேம்பு, ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 30, 2026

அரியலூர்: வாகன விபத்தில் பெண் பலி

image

ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு அருகே, இன்று அதிகாலை 5 மணி அளவில விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த வாகனம் ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்தது. இதில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சாலையில் திடீரென நாய் குறுக்கிட்டதால் இத்துயர சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

News January 30, 2026

அரியலூர்: குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. வரும் பிப்ரவரி 2026 மாதம் 2, 3 தேதிகளில் 481 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட 23,288 பயனாளர்களின் இல்லங்களுக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

அரியலூர்: மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக, எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆண்டிமடம் அலுவலகத்தில் (ஜன. 31) காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!