News January 27, 2026

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நிர்ணயம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.15- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை கடந்த நான்கு நாட்களாக ஏறுமுகத்தில் உள்ளதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News February 3, 2026

பள்ளிப்பாளையம் அருகே விபத்து: பெண் பலி

image

பள்ளிப்பாளையம் அருகே ஐந்துபனை பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி (59) என்ற கூலித்தொழிலாளி, நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றபோது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

அறிவித்தார் நாமக்கல் ஆட்சியர்!

image

நீர்நிலைகளின் காவலன் என்று அழைக்கப்படும் பனை மரங்கள் கைவினைப்பொருட்கள் தயாரிக்கவும், உணவுப்பொருட்களை தரக்கூடியதாகவும், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள் தன்மைக்கு உதவக் கூடியதாகவும், மண் வளம் மற்றும் நீர் சேமிப்பை அதிகரிக்கவும் உதவுகிறது எனவே பனை மரத்தை வெட்ட வேண்டுமானால் நாமக்கல் நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News February 3, 2026

நாமக்கல்: முட்டை விலை மாற்றம் இன்றி நீடிப்பு!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று (பிப். 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலை மாற்றம் இன்றி ரூ. 5.25- ஆக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!