News January 26, 2026
ஹிந்தியால் பல தாய்மொழிகள் அழிந்துவிட்டது: உதயநிதி

மத்திய அரசின் ‘ஹிந்தி திணிப்பை’ தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என உதயநிதி தெரிவித்துள்ளார். மொழி உரிமை என்று வரும்போது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு இருப்பதால், மத்திய பாஜக அரசுக்கு கோபம் வருகிறது என சாடிய அவர், ஹிந்தி திணிப்பால் ஹரியானா (ஹரியான்வி), பிஹார் (பிஹாரி), சத்தீஸ்கர் (சத்தீஸ்கரி), உ.பி.,யில் (போஜ்புரி) தாய்மொழிகள் அழிந்துவிட்டதாக தெரிவித்தார்.
Similar News
News February 10, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 குறைந்தது

இந்த வார தொடக்கமான நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், 1 கிராம் தங்கம் ₹70 குறைந்து ₹14,580-க்கும், 1 சவரன் ₹560 குறைந்து ₹1,16,640-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் வெள்ளி ₹300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
News February 10, 2026
காலியாகும் கூடாரம்.. என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

அதிமுகவை மீட்டே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் ஓபிஎஸ், தனித்து விடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். காரணம், தெளிவற்ற முடிவு, வலிமையான நிலைப்பாட்டில் இல்லாததுதான் எனவும் தெரிவிக்கின்றனர். இதனாலேயே அவரது கூடாரத்தில் இருந்தவர்கள் மாற்றுக்கட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனாலும், தை முடிய நாள்கள் உள்ளது என்கிறார் ஓபிஎஸ். உறுதியான முடிவை எடுப்பாரா?
News February 10, 2026
என்னதான் சொல்ல வாறீங்க? குழப்பத்தில் தவெகவினர்

சமீபத்தில் ‘மக்களுடனே கூட்டணி’ என்று கூறி ‘தனித்து போட்டி’ என்பதை விஜய் சூசகமாக கூறியிருந்தார். இந்நிலையில், தவெகவில் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு தகுந்த மரியாதை, தொகுதிகள் கிடைக்கும் என ஆதவ் மீண்டும் கூட்டணிக்கு வலை விரித்துள்ளார். அதேநேரம், கூட்டணியை நம்பி தவெக இல்லை என அருண்ராஜ் கூறியுள்ளார். இதனால் கூட்டணி நிலைப்பாட்டில் தவெகவினர் குழம்பியுள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?


