News January 26, 2026
கிருஷ்ணகிரியில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல் வெளியீடு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று (26.01.2026) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். அவசர நிலை அல்லது சந்தேக செயல்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக காவல் துறையின் உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 31, 2026
பிப்.2, 3-இல் ‘தாயுமானவர்’ திட்ட பொருட்கள் விநியோகம்

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் குடும்பப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இப்பொருட்கள் விநியோகிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
கிருஷ்ணகிரி அருகே பெண் மர்ம மரணம்!

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்ப நாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி (60), ராணி (52) தம்பதி. இருவரும் கட்டுமான பணி செய்து வரும் நிலையில், குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் மது அருந்தி நிலையில், நேற்று குப்புசாமி எழுந்து பார்த்த போது ராணி ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கணவா் குப்புசாமியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 31, 2026
கிருஷ்ணகிரி: தமிழ் தெரிந்தால் போதும்… வங்கியில் வேலை!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <


