News January 26, 2026
BREAKING: தூத்துக்குடி கடலில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி கீதாஜீவன் நகர், ஜாகீர் உசேன் நகர் பகுதியைச் சேர்ந்த 9 பேர் இன்று தூத்துக்குடி மொட்டை கோபுரம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றனர். இதில், திடீரென்று வீசிய பெரிய அலையில் சிக்கியதில் 6 பேர் உயிர்தப்பினார். நரேன் கார்த்திக் (12), திருமணி (12), முகேந்திரன் (12) ஆகிய 3 சிறுவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவன் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் அப்பகுதியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த குடியரசு தினத்தன்று உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதாக கூறிய போது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கவலையடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 28, 2026
கோவில்பட்டி: தாக்குதலில் ஈடுபட்ட மூவர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த போத்திராஜ் என்பவர் மருத்துவராக உள்ளார். இவர் கடந்த திங்கட்கிழமை காரில் சென்ற போது சுமை ஆட்டோ ஓட்டுநர் பிரவீன் குமார் என்பவரின் ஆட்டோ மீது மோதியது. இதில் ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமாரின் நண்பர்கள் முத்துக்குமார், தினேஷ்குமார் மற்றும் கார்த்திக் ஆகிய மூவர் மருத்துவர் உடன் வந்தவரை சரமாரியாக தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
News January 27, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


