News January 26, 2026
ஒரு வாரத்தில் NDA-வில் இணையும் புதிய கட்சி: நயினார்

தேமுதிகவும் ராமதாஸ் அணியும் எந்த கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது. திமுக, அதிமுக என இரு கூட்டணிகளுமே தேமுதிக மற்றும் ராமதாஸுடன் பேசி வருவதாக தகவல் வருகிறது. இந்நிலையில், இன்னும் ஒருவாரத்தில் புதிய கட்சி ஒன்று NDA-வில் இணையும் என நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.
Similar News
News February 15, 2026
லோன் வாங்கியோருக்கு மகிழ்ச்சி செய்தி

வீட்டுக் கடன் வாங்கிவிட்டு அதிக வட்டி செலுத்துவோருக்கு நிம்மதி அளிக்கும் செய்திதான் இது. அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்கியவர்கள், அதனை ரீஃபைனான்ஸிங் (அ) பேலன்ஸ் டிரான்ஸ்பர் முறையில் மாற்றம் செய்து பல லட்சம் ரூபாயை சேமிக்க முடியும். அதாவது, குறைவான வட்டி விகிதத்தில் பிற வங்கிகளில் கடன் பெற்று உங்களது பழைய கடனை அடைக்கலாம். அவ்வாறு செய்தால், உங்களின் EMI கணிசமாக குறையும். SHARE IT.
News February 15, 2026
இன்று இரவு இந்த 1 மணி நேரம் தூங்காதீர்கள்

மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், 3-ம் கால பூஜை நேரமான இரவு 11:30 மணி முதல் 1 மணி வரையாவது விழித்திருங்கள். இந்த நேரத்தை லிங்கோத்பவ நேரம் என்பார்கள். சிவன், தன்னை லிங்க வடிவில் வெளிக்காட்டிய நேரம் இதுதான். மேலும், பார்வதி, சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். இந்த பிரபஞ்சத்தின் மொத்த சக்தி ஆற்றலும் பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான் எனவும் நம்பப்படுகிறது.
News February 15, 2026
உரிமைத் தொகை.. புகாருக்கு விளக்கம் அளித்த அரசு

SC, ST நலத்துறை நிதியை பயன்படுத்தியே, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ₹5,000 டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு TN அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தனி கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் மூலமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், SC, ST நிதியை பாதுகாக்க, அரசு தனிப்பட்ட சட்டத்தை இயற்றியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


