News January 26, 2026

திருவள்ளூர் கலெக்டர் கொடி ஏற்றினார்!

image

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று(ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்

Similar News

News February 6, 2026

பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

சதுரங்கப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன்(37). பொக்லைன் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு திருவள்ளூரில் இருந்து தேவேந்திரன், பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புல்லரம்பாக்கத்தில் எதிரே வந்த வினோத்(34) ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வினோத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News February 6, 2026

கும்மிடிப்பூண்டி அருகே பரிதாப பலி!

image

பாதிரிவேடு அடுத்த தாணியம்பூண்டி கிராமத்தில் இரும்பு குழாய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் பீகாரைச் சேர்ந்த ஜலாவுதீன்(48). நேற்று முன் தினம் இரவு, இவரின் பணியின் போது இரும்பு குழாய் தவறி இவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 6, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு.

image

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு 11.00 மணி முதல் இன்று காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!