News January 26, 2026

மயிலாடுதுறை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

image

மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

Similar News

News February 4, 2026

மயிலாடுதுறை: இனி வீட்டிலிருந்தே வரி செலுத்தலாம்!

image

மயிலாடுதுறை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> vptax.tnrd.tn.gov.in என்ற <<>>இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News February 4, 2026

மயிலாடுதுறை: WhatsApp பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் தங்களது WhatsApp-க்கு வரும் பங்குசந்தை முதலீடு குறித்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்களது பணத்தை இழக்க நேரிடலாம். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

News February 4, 2026

மயிலாடுதுறை: இறந்து கரை ஒதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

image

சீர்காழி அருகே உள்ள கூழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் நேற்று சில ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த ஆமைகள் விசைப்படகுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!