News May 7, 2024
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

ஆற்காடு தாலுகா விளாப்பாக்கம் அடுத்த எலந்தன்குட்டை அருகில் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் பாதிக்கப்பட்டவரான சரவணன் (52) கடந்த 3 நாட்களுக்கு முன்பு விழுந்துள்ளார். இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின் அடிப்படையிவ் வந்த தீயணைப்பு துறையினர் அவரை இன்று மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News July 6, 2025
அரக்கோணம் – சேலம் மெமு ரயில் ரத்து

அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு சேலம் செல்லும் பயணிகள் ரயில் (ஜூன்23-ம் தேதி) முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் ரத்துசெய்யப்பட்டு உள்ளது. காலை வேலைக்கு கல்லூரிக்கு செல்வோர் இந்த ரயில் மூலம் பயணித்தனர் வந்தனர். திடீர் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள் ஆகியுள்ளனர். பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும், இந்த ரயிலை விரைவில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
News July 6, 2025
ராணிப்பேட்டை மக்களே! உங்களுக்கு தான் இந்த செய்தி

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்று (ஜூலை 7) வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இணையதள மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனுப்பப்படும் இணைப்புகள் மற்றும் கோப்புகளை திறக்கும் போது கவனம் தேவை. வலுவான கடவுச்சொல் பயன்படுத்தி, ஆன்லைன் கோரிக்கைகளை சரிபார்க்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான செயல்களை 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என் தெரிவித்துள்ளது.
News July 6, 2025
ராணிப்பேட்டையில் விவசாய மருந்து விலை குறைவு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சியியல் தடுப்பு மருந்துகளின் விலை இன்று சற்று குறைவடைந்துள்ளது. குறிப்பாக, 1 லிட்டர் மருந்து ரூ.15 முதல் ரூ.25 வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விலை குறைவால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து, இது சாகுபடிக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.