News January 26, 2026
BREAKING: நடிகர் ரஜினி சொன்ன அரசியல் திருப்பம்

நடிகர் ரஜினியுடன் நேற்று நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வடநாட்டு அரசியல் குறித்தும் அங்கு நேரப்போவதாக நம்பப்படும் ஒரு திருப்பம் குறித்தும் ரஜினி சொன்னபொழுது தான் நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் நிகழ்கால வெப்ப அரசியல் குறித்தும் விவாதித்ததாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
BREAKING: நீதிபதி மீது அரிவாள் வீச்சு!

ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி சுதாகர் மீது, செங்குளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் அரிவாள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். தனது மனைவி தங்க முனீஸ்வரியுடன் நடந்து வரும் விவாகரத்து வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதால் ஆத்திரத்தில் இந்த செயலை செய்துள்ளார். நீதிமன்ற வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட ஆயுதம் எப்படி வந்தது என்பது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
News February 16, 2026
சமையல் உப்பில் சுண்ணாம்பா.. கண்டுபிடிப்பது எப்படி?

உப்பில் கூடவா கலப்படம் என நீங்கள் கேட்கலாம். ஆனால், உண்மைதான் என TN உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கிறது. உப்பில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய இந்த ட்ரிக்ஸை பாலோ பண்ணுங்க. தண்ணீரில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு நன்றாக கலக்கவும். *சுத்தமான உப்பு என்றால், தண்ணீர் தெளிவாக இருக்கும் *கலப்படமானது என்றால் தண்ணீர் மங்கலாகி, கிளாஸின் அடியில் தூசி போன்ற படிமன் தங்கும். இந்த விழிப்புணர்வு பதிவை பகிரவும்.
News February 16, 2026
BIG NEWS: முக்கிய ரகசியம் கசிந்தது.. CM ஸ்டாலின் கோபம்

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் சலசலப்புக்கு காரணமான இ-மெயில் இணையத்தில் கசிந்துள்ளது. டெல்லி தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் அனுப்பிய கடிதத்தில், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், வாரிய தலைவர், உள்ளாட்சியில் கூடுதல் இடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது, CM ஸ்டாலினை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிகிறது. இந்த இ-மெயில் SM-ல் கசிந்த சில மணிநேரங்களில் <<19156779>>செல்வப்பெருந்தகை<<>> டெல்லி விரைந்துள்ளார்.


