News January 26, 2026

பெரம்பலூர்: மாதம் ரூ.6,000 வேண்டுமா ?

image

மத்திய அரசின் DDU-GKY திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 15 முதல் 35 வயதுடைய ஆண்களும், 40 வயதுக்குட்பட்ட பெண்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கும் 2 முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் பதிவு செய்ய<> இங்கே க்ளிக்<<>> செய்யுங்க. SHARE IT

Similar News

News January 30, 2026

பெரம்பலுர்: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

பெரம்பலுர் மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல் APP<<>>-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News January 30, 2026

பெரம்பலுர்: மின்தடை அறிவிப்பு

image

குன்னம், வெண்மணி துணைமின் நிலையத்தில் இன்று (ஜன 30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், குன்னம், கல்லம்புதூர், அந்தூர், வரகூர் பெரியவெண்மணி, நல்லறிக்கை, புதுக்குடிசை, மேலமாத்தூர், கீழமாத்தூர், கொத்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில், காலை 9.30 மணியிலிருந்து பராமரிப்பு பணிகள் முடியும் வரை, மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் இ.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தமிழக அரசால் ஏப்.15-ந்தேதி திருநங்கை திளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, அவர்களில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளுக்கு “சிறந்த திருநங்கைக்கான விருது” வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்புவோர் <>இங்கே <<>>கிளிக் செய்து பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். மேலும் தகவலுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!