News January 26, 2026

சென்னை: மெட்ரோ ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

image

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று(ஜன. 26), ஞாயிறு அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயங்கும் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் 12 வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியிலும், பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.

Similar News

News January 30, 2026

மகாத்மா காந்தியும் சென்னையும்!

image

மகாத்மா காந்தி 1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை, 20 முறை சென்னைக்கு வருகை தந்துள்ளார். 1896 ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை வந்த காந்தி, ஜார்ஜ் டவுனில் 14 நாட்கள் தங்கி, பல்வேறு அரசியல் கூட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் நினைவாக சென்னையில் ‘உத்தமர் காந்தி சாலையும்’, கிண்டியில் ‘காந்தி மண்டபமும்’ அமைக்கப்பட்டுள்ளது. காந்தியின் நினைவு தினமான இன்று (ஜன.30) அவரை நினைவு கூர்வோம்.

News January 30, 2026

சென்னை: தமிழ் தெரிந்தால் போதும், வங்கியில் வேலை!

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) வட்டார அதிகாரி பதவிக்கு 2,050 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 165 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் டிகிரி இருந்தால் போதும். சம்பளமாக ரூ.48,480 – ரூ.85,920 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்.18. <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News January 30, 2026

சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம்!

image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3363 மி.கன அடியும், புழல் ஏரியில் 3032 மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 536 மி.கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 422 மி.கன அடியும், வீராணம் ஏரியில் 914 மி.கன அடி நீர் உள்ளது.

error: Content is protected !!