News January 26, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. புதிய அப்டேட்

தஞ்சையில் இன்று திமுகவின் மகளிர் அணி மாநாடு ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. முன்னதாக, மகளிருக்கு மாதம் ₹2000 வழங்கப்படும் என EPS அறிவித்த நிலையில், சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு குறித்து CM ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய மாநாட்டில் பெண்களை மையப்படுத்தி புதிய திட்டங்களுடன், மகளிர் உரிமைத் தொகை உயர்வு பற்றி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
Similar News
News February 11, 2026
சற்றுமுன்: பள்ளியில் நடந்த கொடூரம்.. 10 பேர் பலி

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 10 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், 25 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
News February 11, 2026
கைதியிடம் அடிவாங்கிய மு.க.ஸ்டாலின்.. SHOCKING

மிசாவில் கைதானபோது சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராணயனுடன் கலந்துரையாடிய அவர், தொழு நோயாளிகள் அறையில் தன்னை அடைத்ததாகவும், சிறுநீர் கழிக்கும் பானை, தண்ணீர் பானை இரண்டும் பக்கத்தில் இருக்கும் அளவுக்கு அசுத்தம் நிறைந்த இடமாக அது இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஆயுள் கைதிகளை வைத்து தினமும் அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் பேசியுள்ளார்.
News February 11, 2026
10-வது போதும், தேர்வு கிடையாது: ₹29,000 சம்பளம்!

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன ➤வயது: 18-40 ➤தகுதி: 10th Pass, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் ➤தேர்வு கிடையாது ➤சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.14. ➤விண்ணப்பிக்க இங்கே <


