News May 7, 2024
100 நாள்களைக் கூட நிறைவு செய்யாத பாஜக அரசு

ஹரியானா முதல்வராக நயாப் சைனி பதவி ஏற்று 100 நாள்களைக் கூட நிறைவு செய்யாத நிலையில், அவரது அரசு ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. 2019 இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாத பாஜக (41), ஜேஜேபியுடன் (10) இணைந்து ஆட்சி அமைத்தது. இக்கூட்டணி கடந்த மார்ச் 12ஆம் தேதி முறிந்தது. இதனையடுத்து, 3 சுயேச்சை எல்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்ற, பாஜக போராடி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 5, 2025
அனைவரையும் கவர்ந்த தமிழ் சினிமா டீச்சர்கள்

ஆசிரியர்கள் தினமான இன்று (செப்.5) தங்களுக்கு பிடித்த டீச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கிஃப்ட் கொடுப்பது என அனைவரும் கொண்டாடி தீர்ப்பர். ஆனால் இந்த கொண்டாட்டங்கள் Off-Screen-ல் மட்டும் தான் இருக்க வேண்டுமா என கேட்டால் இல்லை. சினிமாக்களில் On-Screen-ல் வரும் சில ஆசிரியர்களும் நமது வாழ்வில் சொல்லத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர். அதில் உங்களுக்கு பிடிச்ச டீச்சர் யார்? சொல்லுங்க…
News September 5, 2025
BREAKING: ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்: சசிகலா

செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் எனவும், ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம், நாளை நமதே என்றும் அதிரடி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டையன், வலிமையோடு எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 5, 2025
ஏன் ஓணம் கொண்டாடுகிறோம் தெரியுமா?

மஹாபலி என்ற அசுரராஜா, நீதியாலும் அன்பாலும் மக்களை ஆட்சி செய்தார். அவரது புகழால் பொறாமைப்பட்ட தேவர்கள், விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு வாமனராக விஸ்வரூபம் எடுத்து, மஹாபலியிடம் 3 அடியளவு நிலம் கேட்டார். முதல் அடியில் பூமி, 2-ம் அடியில் விண்ணையும், 3-ம் அடிக்கு தன்னையே ஒப்படைத்து தலையை மஹாபலி கொடுத்து, பாதாளத்திற்கு சென்றார். அவர் பாதாளத்தில் இருந்து பூமிக்கு வரும் நாளை ஓணமாக கொண்டாடுகின்றனர். SHARE IT.