News January 26, 2026
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, செம்பட்டி, கோடாங்கிபட்டி, மொட்டணம்பட்டி, காமலாபுரம், ராமராஜபுரம், பாளையங்கோட்டை, பிரவான்பட்டி, ஆத்தூர், சித்தையன்கோட்டை, அம்பாத்துரை, அஞ்சுகம் காலனி, சமத்துவபுரம், பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காய்பட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், உத்தனம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News February 8, 2026
திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.
News February 8, 2026
திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
சைபர் கிரைம் மோசடி: திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய மோசடிகளில் பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்புகொள்ளவும். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதள வாயிலாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.


