News May 7, 2024

குடியரசுத் தலைவரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

image

குடியரசுத் தலைவரே, முப்படைத் தலைவராக விளங்குகிறார். பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அதிகாரம் அவருக்கே உள்ளது. தற்போது, குடியரசுத் தலைவராக முர்மு உள்ளார். அவருக்கு மாதம் ₹5 லட்சம் ஊதியம் அளிக்கப்படுகிறது. இதுதவிர்த்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கும் வசதி, பாதுகாப்பு வசதி, வெளிநாடு, உள்நாட்டு பயணம் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஓய்வுக்கு பின், மாதம் ₹1.5 லட்சம் அளிக்கப்படும்.

Similar News

News September 5, 2025

செங்கோட்டையன் முடிவுக்கு இபிஎஸ் ரியாக்‌ஷன்

image

கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை ஒன்றிணைக்க, செங்கோட்டையன் 10 நாள்கள் கெடு விதித்துள்ள நிலையில், அது தொடர்பாக பேச EPS மறுத்துவிட்டார். தேனியில், செய்தியாளர்கள் சந்திப்பு திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ரத்து செய்துவிட்டு OPS-ன் சொந்த தொகுதியான போடிக்கு பரப்புரைக்கு சென்றுள்ளார். இதனிடையே, செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக EPS-ன் முடிவுக்கு கட்டுப்படுவோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

News September 5, 2025

அனைவரையும் கவர்ந்த தமிழ் சினிமா டீச்சர்கள்

image

ஆசிரியர்கள் தினமான இன்று (செப்.5) தங்களுக்கு பிடித்த டீச்சர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது, கிஃப்ட் கொடுப்பது என அனைவரும் கொண்டாடி தீர்ப்பர். ஆனால் இந்த கொண்டாட்டங்கள் Off-Screen-ல் மட்டும் தான் இருக்க வேண்டுமா என கேட்டால் இல்லை. சினிமாக்களில் On-Screen-ல் வரும் சில ஆசிரியர்களும் நமது வாழ்வில் சொல்லத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர். அதில் உங்களுக்கு பிடிச்ச டீச்சர் யார்? சொல்லுங்க…

News September 5, 2025

BREAKING: ஒன்றுபடுவோம்; வென்று காட்டுவோம்: சசிகலா

image

செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுகவின் ரத்தம் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், அதிமுக எந்த சக்தியாலும் அழிக்க முடியாத பேரியக்கம் எனவும், ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம், நாளை நமதே என்றும் அதிரடி கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, அதிமுகவுக்கு கஷ்டங்கள் ஏற்பட்ட காலங்களில் செங்கோட்டையன், வலிமையோடு எதிர்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!