News January 26, 2026
தி.மலை: கூலி தொழிலாளி கொடூர பலி!

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மாடுகளை மேய்த்து கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று (ஜன.25) மாடுகள் மேய்த்து கொண்டிருக்க போது ஒரு மாடு கன்னியப்பனை முட்டியது இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 30, 2026
தி.மலை கோயிலின் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

பிரசித்திபெற்ற தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்ளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், ரூ.5 கோடியே 45 லட்சத்து 29 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 190 கிராம் தங்கம், 2 கிலோ 390 கிராம் வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
News January 30, 2026
தி.மலையில் குறைந்த விலையில் வாகனம்- DON’T MISS!

திருவண்ணாமலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தின் TN 21 G0793 (Bolero Lx) அரசு வாகனம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அரசு வழிகாட்டு மதிப்பு ரூ.1 லட்சம். 04.02.2026 காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏலம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்க ரூ.5,000 முன் வைப்பு தொகை செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
News January 30, 2026
தி.மலை: தூக்கில் தொங்கிய பெண்

சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார், பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோனிகா (27). கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோனிகாவின் தம்பி மேகநாதன் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*.


