News January 26, 2026
செங்கல்பட்டில் கோர விபத்து; பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து

கேரளாவில் இருந்து வந்த பேருந்து கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோயம்பேடுக்கு செல்ல வேண்டிய சுமார் 18 பயணிகளுடன் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அருகே வரும்போது திடீரென பஸ்சின் முன்புற வலது பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் 20 பேர் காயமடைந்தனர்.
Similar News
News January 28, 2026
செங்கை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

செங்கை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் https://voters.eci.gov.in/l<
News January 28, 2026
செங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

செங்கை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 28, 2026
கிளாம்பாகத்தில் பேருந்து விபத்து

கிளாம்பாகத்தில் இருந்து நேற்று மதியம் 30 பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி அருகே திடீரென பிரேக் பழுதானது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனர் சாலையோர தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.


