News January 26, 2026
பரமக்குடி சிறுவன் உடலுக்கு அரசு மரியாதை!

பரமக்குடி மேலாய்குடி கிராமத்தை சேர்ந்த ராகவன் (16) இவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து கண், இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்டவை அகற்றப்பட்டு 6 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனை டீன் அமுதா தெரிவித்தார். இதையடுத்து சிறுவன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News February 7, 2026
இராம்நாடு: அரசு அலுவலகத்தில் லஞ்சம் கேட்டால்..!

நில அளவை, பட்டா மாற்றம், வரி வசூல், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற நாம் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் தங்கள் பணியை சரியாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால், இராம்நாடு மாவட்ட மக்கள் 04567-230036 or 94450-48893 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 7, 2026
இராம்நாடு: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. இராம்நாடு மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய இங்கே <
News February 7, 2026
இராம்நாடு: கெட்டுப்போன 55 கிலோ மீன்கள் அழிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் மீன் மார்க்கெட் மற்றும் தனியார் மீன் பதப்படுத்தும் கம்பெனிகளில் நேற்று (பிப்.06) திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறையினர் விற்பனைக்காக மீன் மார்க்கெட் மற்றும் கம்பெனிகளில் வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.


