News May 7, 2024
“எலும்பை உடைக்கும் அளவுக்கு வலிமையான நாய்”

சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை மே 5 ஆம் தேதி ராட்வீலர் நாய்கள் கொடூரமாக கடித்து குதறின. இந்த வகை நாய்களை கூண்டில் வளர்ப்பதுதான் நல்லது. எலும்பை கடித்து உடைக்கும் அளவுக்கு அதன் தாடைகள் வலுவானது. இந்தியா மட்டுமின்றி இஸ்ரேல், ரஷ்யா, ஸ்பெயின், உக்ரைன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் இந்த வகை நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 6, 2025
டி.எச்.சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதால், நாளை (ஜூலை 7) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மின்ட் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் மற்றும் லாரிகள், டி.எச்.சாலை சந்திப்பில் திருப்பி எம்.எஸ்.கோயில் தெரு, எஸ்.என்.சாலை, ஜீவரத்தினம் சாலை வழியாக செல்ல வேண்டும். இருசக்கர மற்றும் கார்கள் வழக்கம்போல் சென்று அப்பல்லோ மருத்துவமனை வழியாக செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தை (044-25268323, 044-22500900, 044-22500911) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961941>>தொடர்ச்சி<<>>