News January 26, 2026
சூழ்ச்சியில் விசிகவினர் சிக்கக்கூடாது: ஆதவ் அர்ஜுனா

விசிகவில் இருபது பேர் மட்டும் இருப்பதாக இன்று ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், நான் பேசிய சில வார்த்தைகள் தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக ஆதவ் விளக்கமளித்துள்ளார். திமுகவின் ஆட்களாகவே மாறிவிட்ட 20 பேர் விசிகவுக்குள் இருக்கிறார்கள் என்பதைதான் சுட்டிக்காட்டினேன். ஆனால், தனது பேச்சை தவறாக திரிக்கும் திமுகவினரின் சூழ்ச்சியில் விசிக தோழர்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது எனக் கூறினார்.
Similar News
News February 5, 2026
பாகிஸ்தானுடன் விளையாட தயார்: சூர்யகுமார் யாதவ்

டி20 WC-ல் பாக்., உடன் விளையாட மாட்டோம் என நாங்கள் கூறவில்லை, அவர்கள் தான் கூறினார்கள் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். பிப்.15 அன்று நடைபெறவிருந்த இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாக்., அறிவித்திருந்த நிலையில், ICC அட்டவணைப்படி கொழும்பு செல்வதற்கான விமான டிக்கெட்கள் புக் செய்யப்பட்டுவிட்டதாகவும், பாக்., உடன் விளையாடத் தயார் என்றும் சூர்யகுமார் கூறியுள்ளார். INDvsPAK போட்டி நடக்குமா?
News February 5, 2026
நடிகை பத்மா காலமானார்.. கடைசி PHOTO

மார்பக புற்றுநோய் பாதிப்பால் நீண்ட காலமாக போராடிவந்த சீரியல் <<19055765>>நடிகை வாஹினி (எ) பத்மா<<>>, பூவுலகில் இருந்து விடைபெற்றார். அவரது இறுதி காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. சிகிச்சைக்கு பணமில்லாததால் புற்றுநோயைவிட வறுமையே பத்மாவை அதிகம் வாட்டியது. சக நடிகர்கள் நிதி திரட்டி உதவி செய்து வந்தனர். எனினும், புற்றுநோய் உடனான போரில், பத்மா தோற்றுப் போனது சோகமே! மேலே ஸ்வைப் செய்து, அவரது கடைசி போட்டோவை பாருங்க.
News February 5, 2026
பின்தங்கிய தலைமுறையாக ஜென் Z!

ஜென் Z தலைமுறையினர் முந்தைய தலைமுறையினரை விட குறைவான IQ கொண்டுள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வரலாற்றிலேயே முந்தைய தலைமுறையை விட குறைவான IQ கொண்ட முதல் தலைமுறை எனவும், கல்வியில் டெக்னாலஜியின் அதீத பயன்பாடே இதற்கு காரணம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், AI பதில்களை அதிகம் சார்ந்திருப்பதால் சிந்திக்கும் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


