News January 25, 2026
மயிலாடுதுறை: பொதுக்கூட்டம் ரத்து அறிவிப்பு

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி மணல்மேடு பேரூரில், இன்று அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, நடைபெற இருந்த வீரவணக்க பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 26, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தின் மழையளவு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவு விவரங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
News January 26, 2026
மயிலாடுதுறை: மின்சாரம் தாக்கி பரிதாப பலி!

மணல்மேடுவை சேர்ந்தவர் ராணி (45). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் கொல்லைப்புறத்துக்கு சென்ற பொழுது, திடீரென வழுக்கி கீழே விழுந்து அங்கு இருந்த மின்கம்பியை பிடித்ததாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி ராணி மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராணி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
News January 26, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது, 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்.


