News May 7, 2024

கரூர் கடம்பவனேசுவரர் கோயில் சிறப்பு

image

கரூர் குளித்தலையில் உள்ள 65 ஆவது தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் கடம்பவனேசுவரர் கோயில் ஆகும். சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 2ஆவது தலமான இதில் மூலவராக கடம்பவனநாதர், அம்பாள் முற்றில்லா முலையம்மை உள்ளனர். புராணகாலத்தில் இவ்விடத்திற்கு குழித்தண்டலை என்ற பெயரும் உண்டு. இங்கு கடம்ப வனம் அதிகமிருந்ததாகவும் கூறுகின்றனர். இங்குள்ள முருகனுக்கு அருணகிரிநாதர் பாடல் பாடியுள்ளார்.

Similar News

News August 23, 2025

கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News August 23, 2025

கரூர்: இளைஞர்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

image

கரூர், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தாட்கோ நிறுவனத்தின் மூலம், இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட 4 பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. பயிற்சி காலத்தில் சீருடை, உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News August 23, 2025

கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

image

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!