News January 25, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு HAPPY NEWS

நெருக்கடியிலிருந்து ஜன நாயகன் மீண்டு விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது சென்சார் வழக்கிலும் சாதகமான தீர்ப்பு வர அதிகளவில் வாய்ப்புள்ளதாக சட்ட ஆலோசகர்கள் விஜய்யிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் உற்சாகமடைந்துள்ளதாகவும், தீர்ப்பு வெளியான அன்று மாலையில் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News February 13, 2026
காதலர் தின வாழ்த்துகள்!

அன்பை போற்றும் காதலர் தினத்தன்று காதல் உறவுக்கு அனுப்ப வேண்டிய கவிதைகள் சில *உறவாக யாரும் வேண்டாம்; உயிராக நீ மட்டும் போதும். இனிய காதலர் தின நல்வாழ்த்துகள் *சொல்ல துடிக்கும் உதடுகளுக்கும் சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட உணர்வே காதல் *முதுமையானாலும் வாழ்க்கை புதுமையாகவே இருக்கும்; மனதிற்குள் உண்மையான காதல் இருந்தால் *ஓரெழுத்து கவிதை நீ, ஈரெழுத்து கவிதை நாம், மூன்றெழுத்து கவிதை காதல்.
News February 13, 2026
தங்கம் வாங்குவோருக்கு எச்சரிக்கை

<<19126245>>தங்கம் விலை<<>> கடந்த 2 நாள்களாக இறங்குமுகத்தில் உள்ளது. இதனால், பலரும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவோருக்கு பிரபல சந்தை நிபுணர் கைல் ரோடா (Kyle Rodda) ஒரு அலர்ட் கொடுத்துள்ளார். குறுகிய கால முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். நீண்ட கால முதலீட்டில் ஈடுபடவுள்ளவர்கள் இந்த சரிவை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
News February 13, 2026
சாலை விபத்தில் சிக்கினால் ₹1.5 லட்சத்துக்கு இலவச சிகிச்சை

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்கான ‘PM RAHAT’ திட்டத்தை தொடங்க PM மோடி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், சாலை விபத்தில் சிக்கி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ₹1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவ உதவி இல்லாததால் உயிரிழப்பு என்ற நிலையை மாற்றும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முழுவிவரம் வெளியாகவில்லை.


