News January 25, 2026
ஹிந்தியை திணிக்க ஒரு கும்பல் துடிக்கிறது: CM ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, எப்படியாவது ஹிந்தியை நம் மேல் திணிக்க வேண்டும் என ஒரு கும்பல் துடிப்பதாக மத்திய அரசை சாடியுள்ளார். நேரடியாக ஹிந்தியை திணிக்க முடியாமல் மும்மொழிக் கொள்கை மூலம் திணிக்க முயல்வதாகவும், தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்பை தடுப்பதினால் ₹3,458 கோடி நிதியை தராமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News February 5, 2026
பிப்ரவரி 5: வரலாற்றில் இன்று

*1971–அப்பல்லோ 14 விண்கலம் நிலவில் தரையிறங்கியது *1976–நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் *1985–கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள் *1992–நெய்மார் பிறந்தநாள் *2000–இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா நினைவு நாள் *2023–நடிகர் டி.பி.கஜேந்திரன் நினைவு நாள்
News February 5, 2026
ஈரான், US அணுசக்தி ஒப்பந்தம்.. தேதி குறிச்சாச்சு!

ஈரான், US இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தை ஓமனின் மஸ்கட் நகரில் வரும் நாளை நடைபெறும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதை சுப்ரீம் லீடர் கொமேனி எதிர்த்த நிலையில், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
News February 5, 2026
2026 தேர்தல்.. ஆக்ஷனில் இறங்கிய சீமான்

சட்டமன்ற தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும் நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அவர் அறிவித்துள்ளார். *எழும்பூர்-சரண்யா, *ஆர்.கே.நகர்-தாயுமானவன், *ஆயிரம் விளக்கு-களஞ்சியம், *துறைமுகம்-பெனஷான் ஷெரிப், *அண்ணாநகர்-சி.சங்கர், *ராயபுரம்-பாபுமைலன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.


