News January 25, 2026
அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பாகும் ‘அயலி’

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘அயலி’ வெப் சீரிஸை அரசுப் பள்ளிகளில் ஒளிபரப்ப பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஜனவரியில் அயலி திரையிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நாளை விடுமுறை என்பதால், செவ்வாய்க்கிழமை பள்ளிகளில் படம் ஒளிபரப்பப்பட உள்ளது.
Similar News
News February 6, 2026
BREAKING: தங்கம் விலை ₹1,600 குறைந்தது

தங்கம் விலை இன்று (பிப்.6) சவரனுக்கு ₹1,600 குறைந்து நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 1 கிராம் தங்கம் ₹200 குறைந்து ₹14,120-க்கும், சவரன் ₹1,600 குறைந்து ₹1,12,960-க்கும் விற்பனையாகிறது. இதனால் 2 நாள்களில் மட்டும் ₹6,240 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் வரும் நாள்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 6, 2026
தேமுதிக கூட்டணி முடிவை தாமதிக்க இதுதான் காரணமா?

கூட்டணி நிலைப்பாட்டில் காங்கிரஸின் இரட்டை மனநிலையே தேமுதிக கூட்டணி முடிவை அறிவிக்காததற்கு காரணம் என புதிய தகவல் கசிந்துள்ளது. திமுக கூட்டணியில் இருக்கிறோம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கூறி வந்தாலும், தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால், காங்., TVK பக்கம் சென்றால், தேமுதிகவும் அங்கு செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
News February 6, 2026
பாஸ்வேர்டுகளை AutoFill செய்கிறீர்களா?

உங்கள் போனில் பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றில் உள்நுழையும்போது பாஸ்வோர்டை AutoFill செய்பவரா? நீங்கள் பெரிய ஆபத்தில் இருக்கிறீர்கள். IIIT ஹைதராபாத்தின் ஆராய்ச்சியில், இப்படி AutoFill செய்வது செக்யூரிட்டி வேலையை குறைக்கிறதாம். இதனால், உங்களின் போன் சைபர் கிரிமினல்கள் ஈசியாக ஹேக் செய்யப்பட்டு விடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. எனவே, இனி உங்களின் அனைத்து பாஸ்வோர்டுகளையும் டைப் செய்யுங்கள். SHARE IT.


