News January 25, 2026

ரஜினி வாழ்த்திய பரோட்டா கடைக்காரர்!

image

நடிகர் ரஜினி தனது தீவிர ரசிகரான ‘ரஜினி’ சேகர் என்பவரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். மதுரையில் ‘₹5 பரோட்டா கடை’ நடத்தி வரும் ரஜினி சேகர், அப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயம். கையில் ‘ரஜினி’ சேகர் என பச்சை குத்திக்கொண்டுள்ள இவரை, ‘தலைவர்’ என்றே அப்பகுதியினர் அன்போடு அழைக்கின்றனர். என்றாவது ரஜினியை சந்தித்துவிட மாட்டோமா என ஏங்கியவரை குடும்பத்துடன் நேரில் வரவழைத்து பாராட்டி இருக்கிறார் ரஜினி.

Similar News

News January 31, 2026

பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

image

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.

News January 31, 2026

பிப்ரவரி முதல் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

image

தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் (திங்கள்கிழமை முதல்) தொடங்கவுள்ளது. தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியல் பிப்ரவரி 2-வது வாரம் வெளியாகும். அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கவுள்ளது. நவீன உள்கட்டமைப்புகளுடன் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளில் நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

News January 31, 2026

நாடு முழுவதும் ஸ்டிரைக்

image

8-வது ஊதியக் குழு, ஓய்வூதியம் மற்றும் பணியாளர் நியமனம் தொடர்பான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்.12-ல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என மத்திய அரசு ஊழியர்கள் & தொழிலாளர்கள் கூட்டமைப்பு (CCGEW) அறிவித்துள்ளது. வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை என்பதை உறுதி செய்யக்கோரி, சமீபத்தில் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில், தற்போது மத்திய அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!